நாவூறும் சுவையில் மொறுமொறு இறால் வறுவல்.., எப்படி செய்வது?
அனைவரும் விரும்பி சாப்பிடும் கடல் உணவான இறாலில் கால்சியம், அயோடின், கொழுப்பு மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளன.
இந்த இறால் வறுவலை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் மொறுமொறு இறால் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சோள மாவு- 2 ஸ்பூன்
- மைதா மாவு- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- மிளகு தூள்- 1 ஸ்பூன்
- பூண்டு பொடி- 1 ஸ்பூன்
- முட்டை- 2
- இறால்- 1kg
- பிரட் துகள்- 1 கப்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் இறாலை நன்கு சுத்தப்படுத்தி கழுவி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் சோள மாவு, மைதா மாவு, உப்பு, மிளகு தூள், பூண்டு பொடி சேர்த்து கலந்துகொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் முட்டை சேர்த்து நன்கு கலந்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்தவும்.
இறுதியாக இறாலை கலந்துவைத்த மாவில் இறாலை பிரட்டி முட்டையில் நனைத்து பிரட் துகளில் பிரட்டி எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் சுவையான இறால் வறுவல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |