ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரொனால்டோ! சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு
Cristiano ronaldo retire from international: கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
கால்பந்து உலகில் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo).

41 வயதில் இதுவரை 985 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ, 1000 என்பதே தனது இலக்கு என்றும், அதனை கண்டிப்பாக எட்டுவேன் என்றும் சூளுரைத்திருந்தார்.
இந்த நிலையில், சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக ரொனால்டோ அறிவித்துள்ளார். போர்த்துக்கல் அணிக்காக 234 போட்டிகளில் 146 கோல்கள் அடித்துள்ளார்.
இவற்றில் உலகக்கிண்ணத் தொடர்களில் 52 கோல்களும், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 55 கோல்களும் அடங்கும்.
அல்-நஸர் கிளப் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோவின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.