மீண்டும் மேன்செஸ்டர் யுனைடட் அணியில் இணையும் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ! தகவலால் உற்சாகமான இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் ஜெயவர்தனே
உலக புகழ்பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது தாய் வீடான மேன்செஸ்டர் யுனைடட் அணியில் மீண்டும் இணையவுள்ளார்.
புகழ்பெற்ற இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைடட் அணியில் இணைகிறார் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. Juventus அணியில் இருந்து விலகிய ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய முன்னணி கிளப்கள் போட்டிப்போட்டுக்கொண்டிருந்த சூழலில், அவர் மீண்டும் மேன்செஸ்டர் யுனைடட்-ல் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.
ரொனால்டோவை மேன்செஸ்டர் யுனைடட் அணி 25 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மேன்செஸ்டர் யுனைடட் அணிக்காக 6 சீசனில் விளையாடிய ரொனால்டோ, 8 கோப்பைகளை வெல்ல உதவியுள்ளார்.
Welcome ????, @Cristiano ?#MUFC | #Ronaldo
— Manchester United (@ManUtd) August 27, 2021
ரொனால்டோ மீண்டும் மேன்செஸ்டர் யுனைடட் அணியில் இணைவது கால்பந்து வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான அவரின் டுவிட்டர் பதிவில், லண்டனில் இருந்து விமானத்தில் வந்து துபாயில் தரையிறங்கியது இந்த செய்தியை பார்க்க தானா!! வாவ்!... வெல்கம் ஹோம் என பதிவிட்டுள்ளார்.
Got on a flight from London and landed in Dubai to see this news… wow!!! ?? well come home indeed.. https://t.co/eU4k5TyJOd
— Mahela Jayawardena (@MahelaJay) August 27, 2021