ரொனால்டோவின் முன்னாள் காதலியுடன் புதிய உறவில் பார்சிலோனா வீரர்
ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முன்னாள் காதலி, முன்னாள் பார்சிலோனா வீரர் ஒருவருடன் பாரிஸ் NBA போட்டியில் காணப்பட்டுள்ளார்.
முன்னாள் ஸ்பெயின் தேசிய அணி மற்றும் பார்சிலோனாவின் வீரரான ஜெரார்ட் பிக் (Gerard Piqué), கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முன்னாள் காதலியான இரினா ஷேக்குடன் (Irina Shayk) பாரிஸில் உள்ள Accor Arena Bercy-ல் நட்சத்திரங்கள் நிறைந்த NBA விளையாட்டில் கலந்து கொண்டார்.
Ronaldo & Irina PC: AFP
ஜெரார்ட் பிக் சமீபத்தில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். முன்னாள் பார்சிலோனா டிஃபெண்டரான அவர் ஏமாற்றியதாகக் கூறப்பட்டதை அடுத்து ஜூன் 2022-ல் உலகப்புகழ் பெற்ற பாப் பாடகியான ஷகிராவிடமிருந்து (Shakira) பிரிந்தார்.
Gerard Piqué & Shakira PC: Getty Images
ஜெரார்ட் பிக் வியாழனன்று (ஜனவரி 19), சிகாகோ புல்ஸுக்கு எதிரான டெட்ராய்ட் பிஸ்டன்ஸ் NBA போட்டியின்போது சூப்பர்மாடல் இரினா ஷேக்கைக் கட்டிப்பிடித்தபடி உற்சாகமாக காணப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாயின.
Gerard Piqué & Irina PC: Best Image/Backgrid
ஐந்து வருடங்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோவை காதலித்த இரினா ஷேக், 2015-ஆம் ஆண்டில் தனது உறவை முறித்துக்கொண்டார்.
Ronaldo & Irina PC: Getty Images