கிறிஸ்டியானோ ரொனால்டோவை கண்டுகொள்ளாத சவுதி லீக் கால்பந்து நிர்வாகம்
சவுதி லீக் தொடருக்கான அணியில் போர்த்துகல் உச்ச நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வாய்ப்பு மறுத்துள்ளது அணி நிர்வாகம்.
லீக் தொடருக்கான அணி
முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அணியில் 16 ஆட்டங்களில் 14 கோல்களை பதிவு செய்திருந்தும் லீக் தொடருக்கான அணியில் கைவிடப்பட்டுள்ளார்.
@getty
ரொனால்டோ கடந்த ஜனவரி மாதம் அல்-நஸர் அணியில் சேர்ந்தார், ரெட் டெவில்ஸ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால் பியர்ஸ் மோர்கன் என்ற பிரித்தானிய ஊடவியலாளருடன் மேற்கொண்ட அதிர்வலைகளை ஏற்படுத்திய நேர்காணலுக்கு பின்னரே, அவரது மான்செஸ்டர் யுனைடெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் மோசமான விளையாட்டை வெளிப்படுத்திய நைஜீரியாவின் Odion Ighalo சவுதி லீக் அணியில் தனிக்கவனத்தை ஈர்த்துள்ளார்.
ரொனால்டோ வெளியேறலாம் என தகவல்
27 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள அவர் 19 கோல்கள் பதிவு செய்துள்ளதுடன் 2 கோல்களுக்கு வாய்ப்பையும் உருவாக்கி அளித்துள்ளார். அத்துடன் சவுதி லீக் தொடரில் அதிக கோல் பதிவு செய்தவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
Twitter/Al Nassr
ரொனால்டோவை தெரிவு செய்ய மறுத்துள்ள லீக் நிர்வாகம், அல்-நஸ்ஸர் அணியை சேர்ந்த Luis Gustavo மற்றும் Ghislain Konan ஆகிய இருவரையும் தெரிவு செய்துள்ளது.
இதனிடையே சவுதி அரேபியா அணியில் தமக்குரிய மரியாதை கிடைக்கவில்லை என குறிப்பிட்டு, ரொனால்டோ வெளியேறலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது.
ஆனால் தாம் அல்-நஸ்ஸர் அணியில் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், இங்கேயே தொடர விரும்புவதாகவும், இங்கேயே தொடர்வேன் எனவும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.