இந்தியாவில் விளையாடும் ரொனால்டோ? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
AFC சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரொனால்டோ
போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப் அணியில் விளையாடி வருகிறார்.
இந்த கிளப் அணி AFC சாம்பியன்ஷிப் தொடரில் டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் இந்தியாவின் கிளப் அணியான எப்சி கோவா அணியும் உள்ளது.
இதன் காரணமாக இரு அணிகளும் மோதும் பட்சத்தில் அந்த போட்டி இந்தியாவில் நடைபெறும். எனவே ரொனால்டோ இந்தியாவில் வந்து விளையாடுவார்.
வாய்ப்புகள்
அதேபோல் கொல்கத்தாவின் மோஹன் பாஹன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் இந்த தொடரில் விளையாடுகிறது.
மொத்தம் 32 அணிகள் மோதும் இந்த தொடர் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி தொடங்குகிறது.
உள்ளூர் மற்றும் வெளியூரில் போட்டிகள் நடைபெறுவதால் ரொனால்டோ இந்தியாவில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |