காதலி கொடுத்த பல கோடி மதிப்புள்ள கிறிஸ்துமஸ் பரிசு! வாயடைத்து நின்ற ஜாம்பவான் ரொனால்டோ
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் பல கோடி மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பரிசு
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கூட்டாளியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் (Georgina Rodriguez), அவருக்கு இந்த கிறிஸ்துமஸுக்கு ரூ. 7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce Dawn) கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனைப் பார்த்த ரொனால்டோ வாயடைத்து நின்ற வீடியோ இணையத்தை வைரலாகி வருகிறது.
ரொனால்டோ தனது புதிய வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் டானின் படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
மேலும், ரொனால்டோ தனது புதிய கன்வெர்ட்டிபில் காரை பார்த்து ஆச்சரியத்தில் மலைத்துப்போய் நின்ற முழு காட்சியையும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரொனால்டோவின் விலையுயர்ந்த கார் பட்டியல்
இது ரொனால்டோவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் அல்ல. ரொனால்டோ ஒரு பாரிய கார் பிரியர், மேலும் அவர் தனது கேரேஜில் பல சுவாரஸ்யமான கார்களை வைத்திருக்கிறார். அவரிடம் ஒரு வெள்ளை Rolls Royce Cullinan உள்ளது மற்றும் அதே கேரேஜில் Ferrari f12 TDF கார் உள்ளது.
மேலும், கேரேஜில் மேட் கருப்பு Lamborghini Aventador உள்ளது, அதை ரொனால்டோ தனது 27வது பிறந்தநாளில் வாங்கினார்.
ரொனால்டோவின் இந்த விலையுயர்ந்த கார் பட்டியலில் Porsche 911 டர்போ எஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்65, மெக்லாரன் சென்னா, பென்ட்லி கான்டினென்டல், புகாட்டி வெய்ரான் கிராண்ட் ஸ்போர்ட் வைடெஸ்ஸி, செவ்ரோலெட் கமரோ இசட்எல்1, ஃபெராரி மோன்சா எஸ்பி1, ஃபெராரி 599 ஜிடிஓ, ரோல்ஸ் ரொய்ஸ் 3ஏஎம், ரோல்ஸ் ராய்ஸ் 6எல்இ RS7, Bugatti Chiron, Mercedes-Benz Brabus G65, Ferrari F430, Bugatti Centodieci மற்றும் ஒரு மஸராட்டி கிரான்கேப்ரியோ என இத்தனை கார்களை தனது சேகரிப்பில் வைத்துள்ளார் ரொனால்டோ.
Rolls Royce Dawn
இப்போது தனது மனையிடமிருந்து பரிசாக பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் டான், 6.6L ட்வின்-டர்போ V12 எஞ்சினால் இயக்கப்படுகிறது. இந்த மோட்டருக்கான உச்ச ஆற்றல் வெளியீடு 564 குதிரைத்திறனாக மதிப்பிடப்பட்டுள்ளது. 4.3 வினாடிகளில் மணிக்கு 100 கி.மீ. செல்லக்கூடியது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது உலகின் மிக ஆடம்பரமான டாப்லெஸ் கார்களில் ஒன்றாகும்.