கோகோ கோலாவுக்கு ”நோ” சொன்ன ரொனால்டோ! வைரல் வீடியோ
யூரோ 2020 கால்பந்து தொடரின் போர்சுக்கல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.
இதில் கலந்து கொண்ட ரொனால்டோ, மேஜையின் மீது இருந்த கோகோ கோலா பாட்டில்களை எடுத்து பக்கத்தில் வைத்தார்.
மேலும் தண்ணீர் பாட்டிலை தூக்கி, “அகுவா” என தெரிவித்ததோடு (தண்ணீருக்கான போர்ச்சுக்கீசிய வார்த்தை) தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சமிக்ஞை செய்தார்.
இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது, யூரோ 2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்றாகும்.
மேலும் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ரொனால்டோவுக்கு எதிராக யுஇஎஃப்ஏ இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.