ஒற்றைப் புகைப்படம்.... ரொனால்டோவுக்கு விதிக்கப்பட்ட 99 கசையடி தண்டனை
போர்த்துகல் உச்ச நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடுத்த முறை ஈரானுக்குச் செல்லும்போது பாலியல் துஸ்பிரயோக குற்றத்திற்காக 99 கசையடிகள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்படுகிறது.
சட்டத்தரணிகள் அவர் மீது புகார்
ஒரு பெண் ஓவியருடன் ரொனால்டோ முகம் காட்டிய புகைப்படமே இந்த தண்டனைக்கு காரணமாக அமைந்துள்ளது.
அல்-நஸர் அணி நட்சத்திர வீரரான ரொனால்டோ கடந்த செப்டம்பர் மாதம் ஈரானுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் காரணமாக நாட்டில் உள்ள ஏராளமான சட்டத்தரணிகள் அவர் மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கால்பந்து போட்டி ஒன்றில் கலந்துகொள்ள ஈரான் சென்றிருந்த ரொனால்டோ, அங்குள்ள ஓவியர் பாத்திமா ஹமிமியை சந்தித்துள்ளார். மட்டுமின்றி தாம் வரைந்த ஓவியங்களையும் ரொனால்டோவுக்கு அவர் பரிசாக அளித்துள்ளார்.
இதனையடுத்து, நன்றி தெரிவிக்கும் வகையில், ரொனால்டோ அவரை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் புகைப்படத்திற்கும் ரொனால்டோ முகம் காட்டியுள்ளார்.
தண்டனை மன்னிக்கப்படலாம்
தற்போது இந்த புகைப்படமே ஈரானிய சட்டத்தரணிகளின் கோபத்தை தூண்டியுள்ளது. ஈரானிய சட்டத்தில், திருமணமான பெண்ணைத் தொடுவது விபச்சாரத்திற்குச் சமம் என்றே கூறப்படுகிறது.
ஆனால் உடம்பில் 85 சதவீதம் முடங்கிப்போயுள்ள ஹமிமி போர்த்துகீசிய நட்சத்திரத்தின் மிகப்பெரிய ரசிகர் என்றே கூறுகின்றனர். தொடர்புடைய புகைப்படம் கவனத்தை ஈர்க்க, ஈரானிய நீதி அமைப்பு அந்த புகைப்பட விவகாரத்திற்கு விரைவாக பதிலளித்தது.
அதாவது ரொனால்டோ அடுத்த முறை ஈரானுக்குச் செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டு அவருக்கு 99 கசையடிகள் தண்டனையாக அளிக்கப்படும் என தீர்ப்பளித்துள்ளது. ஆனால் ரொனால்டோ தரப்பில் மன்னிப்பு கோரினால், நீதிபதியால் தண்டனை மன்னிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |