கேமராமேன் மீது தண்ணீர் ஊற்றிய ரொனால்டோ! கோல் எதுவும் அடிக்காததால் கோபம்
கிறிஸ்டியானோ ரொனால்டோ கேமராமேனை நோக்கி தண்ணீர் ஊற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
அரபு கிளப் சாம்பியன்ஸ் கோப்பையில் அல்-ஷபாப் (Al-Shabab) அணிக்கு எதிராக அல்-நாஸ்ர் (Al-Nassr) 0-0 என டிரா செய்ததால் கிறிஸ்டியானோ ரொனால்டோ வருத்தமடைந்தார்.
ஆட்டம் முடிந்து மனமுடைந்த நிலையில் சோகமாக நடந்த வந்துகொண்டிருந்த ரொனால்டோவை ஒளிப்பதிவாளர் ஒருவர் பின்தொடந்து படமெடுத்துவந்தார்.
Getty Images
ரொனால்டோ ஓரிடத்தில் நின்றபிறகும் அவர் தொடர்ந்து வீடியோ பதிவு செய்துகொண்டிருந்த்த்தால், கடுப்பான ரொனால்டோ, கையில் வைத்திருந்த தண்ணீர் போத்தலில் இருந்து கமெராவை நோக்கி நீரை தெளித்தார்.
தெளித்துவிட்டு, வேறு பக்கம் சென்று படம்பிடி என்பதுபோல் சைகை காண்பித்தார். கமெராமேனும் அங்கிருந்து நகர்ந்தார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகிவருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் ரொனால்டோவின் செயலுக்கு அதிர்ப்தியை தெறிவித்துள்ளனர்.
Cristiano Ronaldo wasn’t a happy man after Al-Nassr drew with Al-Shabab last night, throwing water at the cameraman and ushering him away ?pic.twitter.com/OLcMcNzNQa
— 101 Great Goals (@101greatgoals) July 29, 2023
இரு தினங்களுக்கு முன்னதாக ஜப்பானில் இண்டர் மிலனுக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அல் நாசர் போட்டியைத் தொடங்கியது.
அல்-ஷபாப் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு மணி நேரம் கழித்து, அல்-நாசர் ரொனால்டோவை களத்திற்கு அழைத்து வந்தது.
75வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு அக்ரோபாட்டிக் கோல் மூலம் தனது அணியை முன்னிலைப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது.இருப்பினும் கோல் ஆஃப்சைட் என தீர்ப்பளிக்கப்பட்டு ஆட்டம் டிராவில் முடிந்தது, இதனால் ரொனால்டோ கோபத்திற்கு ஆளானார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Arab Club Champions Cup, Al-Nassr, Arab Club Champions Cup group-stage game, Al-Shabab, Cristiano Ronaldo, Cristiano Ronaldo throws water at cameraman, Viral Video