ஆபத்தான நிலையில் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகள்... மோசமான வானிலை தொடரும் என தகவல்
சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழந்துள்ள நிலையில், சில பகுதிகளில் நிலைமை அபாயகரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஐரோப்பாவை துவம்சம் செய்துவரும் இடி மின்னலுடன் கூடிய புயல், சுவிட்சர்லாந்தை கடுமையாக பாதித்துள்ளது.
பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள ஆறுகளும் ஏரிகளும் தங்கள் முழு கொள்ளளவை எட்டி விட்டதாக சுவிஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில் வழக்கத்தை விட இந்த ஜூலையில் ஏற்கனவே அதிக மழை பெய்துவிட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, Lucerne ஏரியின் கரைகள் எப்போது உடையுமோ என்ற அச்சம் உருவாகியுள்ள நிலையில், Lucerne பகுதியில் நிலைமை ஆபத்தானதாக மாறியுள்ளது. அபாய அளவில் Lucerne ஐந்தாவது மட்டத்திலிருப்பதாக பெடரல் சுற்றுச்சூழல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Neues Naturgefahrenbulletin des BAFU zum #Hochwasser: Flüsse weiter angestiegen, Peak für Seen am Wochenende erwartet. #Rutschungen weiterhin möglich. Verhaltensempfehlungen https://t.co/Q5pOtGQQWO @meteoschweiz @Alertswiss #Naturgefahren pic.twitter.com/sYyL0bKMe8
— BAFU (@bafuCH) July 15, 2021
ஐந்தாவது மட்ட அபாய அளவு என்பது, நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் எட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. Oberkirchஇலும் நிலைமை மோசமடைந்துள்ளது.
அங்கு வெள்ளம் உயர்ந்து ரயில் பாதைகள், கிராமங்கள், நகரங்கள், தொழிலகங்கள் என பாரபட்சமின்றி பாதிப்புக்குள்ளாகியுள்ளன. Biel நதி அபாய அளவை எட்டிவிட்டது, அதன் நீர்மட்டம் வரும் நாட்களில் இன்னமும் அதிகரிக்கும் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
Echt jetzt? #zürichsee pic.twitter.com/wJ9FYvwtZl
— Salome Woerlen (@WoerlenSalome) July 15, 2021
இதுபோக, Bern, சூரிச், Ligerz am Bielersee , Spiez am Thunersee மற்றும் Frauenthal an der Lorze ஆகிய பகுதிகளும் நான்காவது மட்ட அபாய அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸலில் Rhine நதியோரம் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு ஏரிகள், கால்வாய்களில் குளிக்க உள்ளூர் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
An der Promenade am Zürichsee kriegt man bald nasse Füsse. Die Schwäne scheint's nicht zu kümmern. pic.twitter.com/2Ym02Pl7rk
— Salome Woerlen (@WoerlenSalome) July 15, 2021
ஏற்கனவே மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் சுவிட்சர்லாந்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் வரும் நாட்களில் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெருவெள்ளம் அல்லது இயற்கை பேரழிவுகளின்போது, மக்கள் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் இடங்களை கார்கள் மூலம் கடப்பது போன்ற ரிஸ்க் எடுக்கும் காரியங்களில் இறங்கவேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
Es war auch schon angenehmer, am #Zürichsee Abfall zu entsorgen. #Hochwasser pic.twitter.com/dDrI0IAmlA
— Salome Woerlen (@WoerlenSalome) July 15, 2021
அபாய எச்சரிக்கைகள் குறித்து அறிந்துகொள்வதற்கு the AlertSwiss app அல்லது the MeteoSwiss appஐ பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு...https://www.thelocal.ch/20210715/the-situation-is-critical-switzerlands-wild-weather-to-continue/
Das Zentrum von Stansstad im Kanton Nidwalden ist überflutet. Passieren kann man nur noch via Brücke. @watson_news #Hochwasser #Hochwassergefahr pic.twitter.com/DW6ZW86cjq
— Vanessa Hann (@hann_vanessa) July 15, 2021
Je me trouve à proximité du lac de Bienne, dont le niveau a dépassé le seuil de crue ce matin et continue encore d'augmenter. J'ai pu constater de mes propres yeux à quel point la situation est critique.#lacdebienne #intempéries pic.twitter.com/uglaH7YeTR
— Guy Parmelin (@ParmelinG) July 15, 2021