உக்ரைன் ஊடுருவல் தொடர்பில் சுவிஸ் உளவுத்துறை மீது வைக்கப்பட்டுள்ள கடும் விமர்சனம்
உக்ரைன் ஊடுருவல் குறித்த தகவலை சுவிஸ் உளவு ஏஜன்சி கோட்டை விட்டுவிட்டதாக கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் உளவு ஏஜன்சியான The Federal Intelligence Agency (FIS), உக்ரைனை ரஷ்யா ஊடுருவதை குறித்த தகவலை அறிந்துகொள்ளத் தவறிவிட்டதாகவும், அதுதான் சுவிஸ் அரசு உக்ரைன் ஊடுருவல் தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லாததற்குக் காரணம் என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இத்தனைக்கும், சமீபத்தில்தான் சுவிஸ் உளவுத்துறைக்காக பட்ஜெட்டில் கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டது. அத்துடன், கடந்த சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் அதிகமானோரை பணிக்கு அமர்த்தியுள்ளது உளவு ஏஜன்சி.
பிரித்தானிய மற்றும் அமெரிக்க உளவுத்துறைகள் உக்ரைனை ரஷ்யா தாக்கத் தயாராவதாக தகவல்கள் கொடுத்த நிலையில், சுவிஸ் உளவு ஏஜன்சியோ அமைதி காத்து வந்தது.
உளவு ஏஜன்சி சரியான நேரத்தில் உக்ரைன் ஊடுருவல் குறித்து தகவல் கொடுக்காததுதான், பெடரல் கவுன்சில் ஆரம்பத்தில் இந்த விவகாரம் தொடர்பில் சற்று குழப்பமடைந்ததற்கான காரணங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
சுவிஸ் ஜனாதிபதியான Ignazio Cassis உக்ரைன் ஊடுருவல் எதிர்பாராத ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்க, மக்களில் பாதிபேரோ, யாரோ கதைவிடுகிறார்கள் என்பது போலத்தான் நினைத்திருக்கிறார்கள்.
விடயம் என்னவென்றால், ரஷ்யா, Donbas பகுதிக்குள் மட்டுமே நுழையும் என சுவிஸ் பகுப்பாய்வாளர்கள் நம்பியிருக்கிறார்கள் போலும்.