செத்துக்கொண்டிருக்கும் தன் தாயின் புகைப்படத்தை வெளியிட்ட அதே தொலைக்காட்சிக்கு பேட்டியா?: மாய்மாலம் செய்வதாக ஹரி மீது விமர்சனம்
இளவரசர் ஹரி வெட்கப்படவேண்டும், சில ஆண்டுகளுக்கு முன் செத்துக்கொண்டிருக்கும் தன் தாயின் புகைப்படத்தை வெளியிட்ட அதே தொலைக்காட்சிக்கு எப்படி பேட்டி கொடுக்க முடிந்தது அவரால் என கேள்வி எழுப்பியுள்ளார் ராஜ குடும்ப வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஒருவர்.
இளவரசி டயானா விபத்தில் சிக்கிய நிலையில், அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அந்த தருணத்தை ஒளிபரப்பிய ஒரே தொலைக்காட்சி அமெரிக்காவின் CBS தொலைக்காட்சிதான்.
தன் தாயை அவமதித்த அந்த தொலைக்காட்சிக்கு ஹரியால் எப்படி பேட்டி கொடுக்கமுடிந்தது? ஒருவேளை அவருக்கு ஞாபகம் இல்லையா அல்லது, ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுவிட்டதால் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டாரா? அவர் மாய்மாலம் செய்கிறார் என்று கூறியுள்ளார் ராஜ குடும்ப வாழக்கை வரலாற்றாசிரியரான Hugo Vickers.
1997ஆம் ஆண்டு இளவரசி டயானா பாரீஸில் கார் விபத்தில் இறந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டியதற்காக 2004ஆம் ஆண்டு CBS தொலைக்காட்சி கடும் கண்டனத்துக்குள்ளாகியது.
அப்போதைய பிரித்தானிய பிரதமாரான டோனி பிளேர், அந்த புகைப்படங்கள் டயானாவின் குடும்பத்துக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தும் என தெரிந்த நிலையிலும், அவற்றை ஒளிபரப்பியது சரி இல்லை என அனைவருமே கருதுவதாக தெரிவித்திருந்தார்.
அதே புகைப்படம் இத்தாலிய பத்திரிகை ஒன்றில் மீண்டும் வெளியானபோது, இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் அதைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.
அந்த பத்திரிகை தரமிறங்கி நடந்துகொண்டதாகவும், அந்த புகைப்படத்தை வெளியிட்டதால் தாங்கள் ஆழ்ந்த கவலையடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
அப்படி தன் தாயை அவமதித்த அதே மற்றும் ஒரே தொலைக்காட்சியான CBS தொலைக்காட்சிக்கு தற்போது ஹரியும் மேகனும் பேட்டிகொடுத்துள்ளதால், அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

