'ஏமன் மக்களின் உயிரை வைத்து லாபம் பார்க்கிறது' பிரித்தானியா மீது எழுந்துள்ள கடும் விமர்சனம்
சவூதி அரேபியாவுக்கு 1.9 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய பிரித்தானியா ஒப்புதல் அளித்துள்ள நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எமன் மக்கள் மீது போர் நடத்த சவூதி அரேபியாவுக்கு பிரித்தானியா மற்றும் அமெரிக்கா வழங்கிவந்த ஆயுதங்கள் தான் பெரும் உதவியாக இருந்துவந்தது.
எமன் நாட்டில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போரில், ஹவுதி இயக்கத்தினருடன் சண்டையிட்டு வரும் சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய கடந்த 2019-ஆம் ஆண்டு பிரித்தானியா தடை விதித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, சவூதிக்கு ஆயுதம் அளித்து ஆதரவு அளித்துவந்த அமெரிக்காவும் அதிலிருந்து பின்வாங்கியது.
இந்த நிலையில், பிரித்தானியா மீண்டும் சவூதிக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய பிரித்தானியா ஒப்புதல் அளித்துள்ளது.
ஏவுகணைகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல வகையான சுமார் 1.9 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் பிரித்தானியா மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
அமெரிக்கா அதன் ஆதரவிலிருந்து பின் வாங்கினாலும், பிரித்தானியா மீண்டும் மீண்டும் ஏமன் மக்களுக்கு எதிரான உள்நாட்டு போருக்கு பெரும் தூண்டுதலாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
எத்தனை ஏமன் மக்களின் உயிர் போனாலும் பிரித்தானியா தன் லாபத்துக்காக தொடர்ந்து ஆயுதங்களை விற்கிறது என குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும், பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை ஒரு மனிதாபமற்ற மற்றும் அறமற்ற செயல் என விமர்சிக்கப்படுகிறது.