பிரதமர் போரிஸ் ஜான்சனின் 3வது மனைவி மீதான குற்றச்சாட்டு இப்படிப்பட்டது தான்! பிரித்தானியா சுகாதார அமைச்சர் காட்டம்
பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவெடுப்பத்தில் அவரது மனைவி கேரி தலையிடுவதாக வெளியான தகவல்கள் பாலினவாதம் கொண்டது, கண்ணியமற்றது மற்றும் நியாயமற்றவை என்று பிரித்தானியா சுகாதார அமைச்சர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.
ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் Michael Ashcroft புத்தகத்தில், பிரதமரின் முடிவெடுப்பதில், கேரி எதிர்மறையான வழியில் செல்வாக்கு செலுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பாலினவாதம் கொண்டது, கேரியை விமர்சிப்பது கண்ணியமற்றது, நியாயமற்றது மற்றும் தவறானது என பிரித்தானியா சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் பெண் வெறுப்பு கொண்டவை என்றும் ஜாவித் தெரிவித்துள்ளார். ஒரு அரசியல்வாதிகளின் வாழக்கைத் துணைவி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என பொது விதி இருப்பதாக ஜாவித் குறிப்பிட்டுள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தகவல் தொடர்புத் தலைவரும், ஜாவித் உள்ளிட்ட அமைச்சர்களின் முன்னாள் மூத்த ஆலோசகருமான கேரி (33), ஜான்சனின் மூன்றாவது மனைவி மற்றும் இந்த தம்பதியருக்கு இரண்டு இளம் குழந்தைகள் உள்ளனர்.
Michael Ashcroft புத்தகத்தில் உள்ள குற்றச்சாட்டுகள், கணவரின் எதிரிகளால் கேரிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள மோசமான பிரச்சாரம் என கேரியின் செய்தித்தொர்பாளர் தெரிவித்துள்ளார்.
கேரியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க, முன்னாள் அதிகாரிகளின் சமீபத்தில் முயற்சி இதுவாகும். அவர் அரசாங்கத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஒரு தனிப்பட்ட நபர் என கேரியின் செய்தித்தொர்பாளர் தெரிவித்துள்ளார்.