பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் முன்னேறும் ரிஷி சுனக் மீது விமர்சனம்: அவர் என்ன சொன்னார்?
பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பிலும் முன்னணி வகிக்கிறார் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்.
அவருக்கு அடுத்த இடங்களில், வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் (Penny Mordaunt)ம், வெளியுறவுச் செயலரான லிஸ் ட்ரஸ் (Liz Truss)ம் தொடர்ந்து இடம்பிடிக்கிறார்கள்.
பெரிதும் கவனம் ஈர்த்த மற்றொரு இந்திய வம்சாவளியினரான அட்டார்னி ஜெனரல் Suella Bravermanக்கு இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறத் தேவையான 30 வாக்குகள் கிடைக்காததால், அவர் பிரதமருக்கான போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய ரிஷி சுனக் மீது, நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கும்போது, நாட்டின் பிரதமர் போட்டியிலிருக்கும் அவரோ மிகப்பெரிய பணக்காரராக இருப்பதாகவும், அதனால், அவர் நாட்டை ஆளலாமா என்றும் ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்துள்ள ரிஷி, தான் எப்போதுமே ஒருவரை அவருடைய வங்கிக்கணக்கின் அடிப்படையில் மதிப்பீடு செய்வதில்லை என்றும், அவர்களுடைய குணாதிசயங்களை வைத்துதான் தான் அவர்களை மதிப்பீடு செய்வேன் என்றும், மற்றவர்களும் அதையே செய்யவேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.