கிராமப்பகுதிகளுக்கு மென்பொருளை கொண்டு சென்ற தஞ்சாவூர் தமிழர்: அவரது சொத்து மதிப்பு
ஒரு சாதாரண ஊழியராக தொடங்கியதிலிருந்து இந்தியாவின் பணக்கார தொழில்முனைவோர்களில் ஒருவராக படிப்படியாக உயர்ந்தவர் தஞ்சாவூர் தமிழரான ஸ்ரீதர் வேம்பு.
சொத்து மதிப்பு ரூ.39,000 கோடி
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஸ்ரீதர் வேம்புவின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ.39,000 கோடி என்றே கூறப்படுகிறது.
இவரது சகோதரி ராதா வேம்புவும் முக்கிய பொறுப்புகளில் செயல்பட்டு வருவதுடன், பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதன்மையான இடத்தில் உள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தற்போது அவர் Zoho கார்ப்பரேஷனின் இணை நிறுவனராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.
Zoho நிறுவனத்தின் சமீபத்திய வருவாய் என்பது 1 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளதாகவே கூறப்படுகிறது. 1989ல் ஐ.ஐ.டி மட்ராஸில் இருந்து மின் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.
கிராமப்புறங்களுக்கும் மென்பொருள்
அத்துடன், நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்தார். 1996ல் தமது சகோதரர்களுடன் இணைந்து Adventnet என்ற மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினார்.
அதுவே 2009 முதல் Zoho கார்ப்பரேஷன் என அறியப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களுக்கும் மென்பொருளை கொண்டு சேர்க்க வேண்டும் என நோக்கத்திலேயே தமது நிறுவனத்தை தென்காசி பகுதியில் விரிவுபடுத்தி உள்ளார்.
மேலும், இந்தியாவின் முக்கிய ஏற்றுமதியான தகவல் தொழில்நுட்ப சேவைகளில் கிராமப்புறங்களில் இருந்து திறமையானவர்கள் பணியாற்ற வேண்டும் என்ற அவரது கனவை அவர் நிறைவேற்றி வருகிறார் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |