2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல்... பக்கத்து நாடுகளிலிருந்து வாங்கும் பொருட்களுக்கு வரி
பொதுவாகவே, சில நாடுகளிலுள்ள மக்கள், தங்கள் பக்கத்து நாடுகளில் பொருட்கள் குறைவான விலையில் கிடைக்கும் பட்சத்தில், எல்லை தாண்டி அங்கு சென்று பொருட்களை வாங்கிவருவது உண்டு.
அந்த வழக்கம் சுவிட்சர்லாந்திலும் உண்டு. ஆனால், அதற்கும் பிரச்சினை வர இருக்கிறது.
பக்கத்து நாடுகளிலிருந்து வாங்கும் பொருட்களுக்கு வரி
சுவிஸ் மக்கள், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்று பொருட்களை வாங்கிவருவதுண்டு.
நபர் ஒருவர், மதிப்புக் கூட்டு வரி இல்லாமல் 300 சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்பிலான பொருட்களை பக்கத்து நாடுகளிலிருந்து வாங்கிவரலாம் என்ற நடைமுறை தற்போது உள்ளது.
ஆனால், 2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து அந்த நடைமுறை மாற இருக்கிறது.
ஆம், ஜனவரி 1ஆம் திகதிக்குப் பின், பக்கத்து நாடுகளிலிருந்து வாங்கிவரும் 150 சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்பிலான பொருட்களுக்கு மட்டுமே மதிப்புக் கூட்டு வரி கிடையாது என சுவிஸ் பெடரல் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |