தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் கனமழை - வலுவடைகிறதா மண்டலம்?
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலைக்குள் வலுவிலந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய ஆய்வு மையும் தெரிவித்துள்ளது.
வலுவடைகிறதா மண்டலம்?
மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையில் உள்ள பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே புதுச்சேரிக்கு அருகே நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் சென்னைக்கு 400 கி.மீ. தொலைவில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்காமல் கரையை கடக்கக்கூடும்.
வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என முன்னதாக கூறப்பட்டிருந்தது.
காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே நாளை காலை கரையை கடக்கும்.
இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என கூறப்பட்ட நிலையில் நாளை கடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையை கடக்கும் நேரத்தில 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும், இடையிலே 75 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |