பிரித்தானியாவில் பொலிஸார் மீது பாய்ந்த குறுக்கு வில் அம்பு: தாக்குதல்தாரி அதிரடி கைது!
பிரித்தானியாவின் ஹை வைகோம்பில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு பதிலளித்த போது பொலிஸ் அதிகாரி குறுக்கு வில்லால் சுடப்பட்டுள்ளார்.
பக்கிங்ஹாம்ஷயரில் பரபரப்பு
பிரித்தானியாவின் ஹை வைகோம்ப்(High Wycombe), பக்கிங்ஹாம்ஷயரில்(Buckinghamshire) நடந்த வன்முறை சம்பவத்திற்கு பதிலளிக்க சென்ற போது, காவலர் ஒருவர் குறுக்கு வில் அம்பால் காலில் தாக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட தகவலின்படி, அறுபது வயது மதிக்கப்பட்ட ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த டேம்ஸ் வேலி காவல்துறை(Thames Valley Police ) அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு அதிகாரி குறுக்கு வில் அம்பால் தாக்கப்பட்டார்.
காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், அவரது காயங்கள் கடுமையானவை மற்றும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று தெரியவந்துள்ளது.
குற்றவாளி கைது
இந்த சம்பவம் தொடர்பாக, ஹை வைகோம்பை சேர்ந்த 54 வயதான ஒருவர் கத்தி குத்து மற்றும் காவலர் மீதான தாக்குதல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரும் காவல்துறை கண்காணிப்பில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உதவி காவல் துணை கண்காணிப்பாளர் Tim Metcalfe, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவு தெரிவித்து, "காயமடைந்த காவலர் மற்றும் அவரது சக ஊழியர்கள் மற்றும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.
குற்றவாளி மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்த மேலும் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |