FIFA உலகக்கோப்பை கால்பந்து: 12 போட்டிகளில் முதல் முறையாக கோல் போடாத குரோஷியா..டிராவில் முடிந்த ஆட்டம்
அல் பாய்ட் மைதானத்தில் இன்று நடந்த குரோஷியா, மொராக்கோ அணிகளுக்கிடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
ப்ரீ கிக் வாய்ப்புகள் வீண்
குரூப் F-யில் உள்ள குரோஷியா மற்றும் மொராக்கோ அணிகள் அல் பாய்ட் மைதானத்தில் இன்று மோதின.
பரபரப்பாக ஆரம்பித்த இந்தப் போட்டியின் 20வது நிமிடத்தில், மொராக்கோ அணி வீரர் ஹக்கீம் அடித்த பிரீ கிக் ஷாட்டை குரோஷியா வீரர்கள் தடுத்தனர்.
@Getty Images
அதன் பின்னர் இரு அணி வீரர்களின் கோல் முயற்சி தோல்வியில் முடிந்ததால், முதல் பாதி 0-0 என சமநிலையில் இருந்தது. ஆட்டத்தின் 65வது நிமிடம் வரை கோல் விழாததால், மொராக்கோ அணி சோபையனேவுக்கு மாற்று வீரராக எஸ் அப்டே-வை களமிறக்கியது.
அதனைத் தொடர்ந்து 71வது நிமிடத்தில் குரோஷியாவின் லுகா மோட்ரிக் அடித்த தொலைதூர ப்ரீ கிக் ஷாட் தோல்வியில் முடிந்தது.
அடுத்தடுத்து களமிறங்கிய மாற்று வீரர்கள்
79வது நிமிடத்தில் குரோஷியா ஒரு மாற்று வீரரையும், 81வது நிமிடத்தில் மொராக்கோ ஒரு மாற்று வீரரையும் அடுத்தது களமிறக்கின. ஆனாலும் கோல் விழவில்லை.
90வது நிமிடத்தில் குரோஷிய வீரர் மிஸ்லாவ் மாற்று வீரராக களமிறங்கினார். கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையிலும் இரு அணியும் ஒரு கோல் கூட அடிக்காததால் போட்டி டிராவில் முடிந்தது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் மொராக்கோ அணி வீரர் சோபியான் அம்ரபாட் ஃபவுல் செய்ததற்காக மஞ்சள் அட்டை பெற்றார்.
2006ஆம் ஆண்டுக்கு பிறகு 12 உலகக்கோப்பைகளில் முதல் முறையாக, இந்தப் போட்டியில் குரோஷியா அணி கோல் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.