கே.எல்.ராகுல் மீது கார்க்கை வீசி இங்கிலாந்து ரசிகர்கள் அட்டூழியம்.. கடுப்பான கோஹ்லி செய்த செயல் ! வைரலாகும் வீடியோ
இங்கிலாந்து-இந்தியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து ரசிகர்கள் கே.எல்.ராகுல் மீது ஷாம்பெயின் கார்க்குகளை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் ஆகஸ்ட் 12ம் திகதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ராகுலின் சதத்தால் முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, 3வது நாள் உணவு இடைவேளையின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 216 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ஜோ ரூட் 89 ஓட்டங்களுடனும், பரிஸ்டோ 51 ஓட்டங்களுடனும் விளையாடி வருகின்றனர்.
Champagne cork !!
— Gowtham ᴹᴵ (@MGR_VJ) August 14, 2021
Cheap from England fans #ENGvIND pic.twitter.com/5Jd6HZEu9C
இந்நிலையில், 3வது நாள் போட்டியின் போது பவுண்டரிக்கு அருகே பீல்டிங் செய்துக்கொண்டிருந்து இந்திய வீரர் கே.எல்.ராகுலை நோக்கி மைதானத்திலிருந்த இங்கிலாந்து ரசிகர்கள் ஷாம்பெயின் கார்க்குகளை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து ரசிகர்களின் செயலை கண்டு கடுப்பான கோஹ்லி, கீழே கிடக்கும் கார்க்குகளை எடுத்து திரும்பி வீசுமாறு ராகுலுக்கு சிக்னல் காட்டினார்.
இங்கிலாந்து ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல, அவுஸ்திரேலிய வீரர்களும் இங்கிலாந்தில் இதுபோன்ற எதிர்ப்புகளை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.