ஜேர்மனியில் சமூக ஊடக பிரபலத்தைக் காண குவிந்த மக்கள்: ஆறு பேர் காயம்
ஜேர்மனியில் சமூக ஊடகப் பிரபலம் ஒருவரைக் காண மக்கள் குவிந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக ஒரு சிறுமி உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.
சமூக ஊடக பிரபலத்தின் திடீர் அறிவிப்பு
நேற்று ஞாயிற்றுக்கிழமை, சமூக ஊடகப் பிரபலமும் கால்பந்து விளையாட்டு வீரருமான Nader Jindaoui என்பவர், திடீரென தான் ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள waffle கடை ஒன்றிற்கு வர இருப்பதாக அறிவித்தார்.
@its_sandra11.11 #fyp #viral #meetandgreet #jindaouis #berlin #28 ♬ Originalton - its_sandra11.11
ஆகவே, Naderஐக் காண அந்தக் கடை முன் மக்கள் கூட்டமாக திரண்டனர்.
Naderஉடன், அவரது மனைவியும் சமூக ஊடகப் பிரபலமுமான Louisaவும் அந்தக் கடைக்கு வர, சம்பந்தப்பட்ட கடையும் இலவசமாக waffleகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
முதலில் சுமார் ஆயிரம்பேர் கடை முன் திரள, சிறிது நேரத்தில் ஆயிரம் இரண்டாயிரமாக, அங்கு கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
@adnan_tekk Nader regelt alles lo @Jasmin ❤️#nader #naderjindaoui #jindaouis #jindaouibowl #louisajindaoui #fy #fyourpage #fouryoupage ♬ Originalton - adnan_tekk
கூட்டத்தில் சிக்கிய ஒரு 10 வயது சிறுமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளாள்.
அத்துடன், ஒரு எட்டு வயது சிறுவன் உட்பட இளைஞர்கள் ஐந்து பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
பொலிசாரின் தலையீட்டின் பேரில் அந்த கடை உரிமையாளர் இலவசமாக waffle வழங்குவதை நிறுத்தியுள்ளார்.
என்றாலும், கடைக்கு வந்த Nader கடையை விட்டு வெளியேற முயன்றபோது மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
பின்னர், தன்னால் ஏற்பட்ட அசௌகரியத்துக்காக Nader தன் ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |