சிறுமியின் புகைப்படம் வெளியிட்டு லண்டன் பொலிசார் விடுத்த கோரிக்கை
கடைசியாக சம்பவத்தன்று காலை தோர்ன்டன் ஹீத் பகுதியில் காணப்பட்டதாக தகவல்
சாம்பல் மற்றும் வெள்ளை நிற ஜம்பர் அணிந்துள்ள, புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
தெற்கு லண்டனில் குரோய்டன் பகுதியை சேர்ந்த 11 வயது இந்திய வம்சாவளி சிறுமி தொடர்பில் புகைப்படம் வெளியிட்டு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குரோய்டன் பகுதியை சேர்ந்த 11 வயது நெஹால் என்ற சிறுமி செப்டம்பர் 2ம் திகதியில் இருந்தே காணவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தேடி வருவதாக கூறும் பொலிசார், அவர் கடைசியாக சம்பவத்தன்று காலை தோர்ன்டன் ஹீத் பகுதியில் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், மாணவி நெஹால் சாம்பல் மற்றும் வெள்ளை நிற ஜம்பர் அணிந்துள்ளதாகவும், மாணவியின் புகைப்படத்தையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
@Met Police
புகைப்படத்தின் அடிப்படையில், நெஹால் அதிக நீளமற்ற அடர் பழுப்பு நிற கேசம் மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர் என்பதையும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, பொலிசார் டுவிட்டர் பக்கத்திலும் சிறுமி நெஹால் தொடர்பில் பதிவிட்டு, இணையவாசிகளிடம் உதவி கோரியுள்ளனர். மேலும், நெஹால் தொடர்பில் உறுதியான தகவல் தெரியவரும் மக்கள் உடனடியாக 101 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் சாட்சியம் அளிக்க விரும்புபவர்கள் 116 000 என்ற இலக்கத்தில் குறுந்தகவல் அளிக்கவோ அழைப்பு விடுக்கவோ முன்வரலாம் எனவும், இது இலவச சேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.