லண்டனில் 16 வயது சிறுவன் குத்திக் கொலை: 15 வயது சிறுவன் கைது
தெற்கு லண்டனில் 16 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குரோய்டோனின் (Croydon) ஷ்ரப்லேண்டு பகுதியில் பிராக்கன் அவென்யூவில் (Bracken Avenue) உள்ள ஒரு குடியிருப்பில், வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் பல கத்திக்குத்து காயங்களுடன் 16 வயது சிறுவனை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
சிறுவனுக்கு மருத்துவ முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் சிலநிமிடங்களில் லண்டனின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றபோது, சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை), 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு கிழக்கு சசெக்ஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை இன்னும் நடத்தப்படவில்லை, காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரரையை தொடங்கியுள்ளனர்.
விசாரணையை வழிநடத்தும் துப்பறியும் தலைமை ஆய்வாளர் டேவ் பிளேர், "இந்த கொலை தொடர்பால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இந்த கொடூரமான சம்பவம் தொடர்பான தகவல்களை அறிந்த எவரும் இருந்தால், அது எவ்வளவு சிறிய விடயமாக இருந்தாலும் பொலிஸை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரை 19 லண்டன் டீனேஜ் பில்லிங்க்ல கொலை செய்யப்பட்டுள்ளனர், அதில் 17 பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர்.