லண்டனில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு: குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட சாரதி
லண்டனில் டிராம் விபத்தில் 7 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், உரிய கவனம் செலுத்த தவறிய குற்றச்சாட்டில் சாரதி குற்றவாளி அல்ல என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சாரதி குற்றவாளி அல்ல
தெற்கு லண்டனில் உள்ள க்ராய்டனில் ஒரு ஆபத்தான வளைவில் கடந்த 2016ல் டிராம் வண்டி ஒன்று தடம் புரண்டது. இதில் பின்பற்ற வேண்டிய வேகத்தை விட மூன்று மடங்கு வேகத்தில் டிராம் வண்டியை செலுத்தியதாக 49 வயதான ஆல்ஃபிரட் டோரிஸ் மீது வழக்கு பதியப்பட்டது.
@getty
விபத்தின் போது டோரிஸ் மிக மெல்லிய தூக்கத்தில் இருந்திருக்கலாம் அல்லது கவனிக்க மறந்திருக்கலாம் என்றே வழக்கு தொடர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட எந்த ஒரு குற்றச்சாட்டும் உண்மைக்கு புறம்பானது என டோரிஸ் சாதித்துள்ளார்.
இந்த நிலையில் தான் நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என தீர்ப்பளித்துள்ளது. விபத்துக்கு பின்னர் முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ள டோரிஸ், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார்.
தாம் வெறும் ஒரு சராசரி மனிதன் என குறிப்பிட்டுள்ள டோரிஸ் மனிதரால் கட்டுப்படுத்த முடியாத சில தவறுகள் நடக்கலாம், அதில் இந்த விபத்தும் ஒன்று என்றார். அந்த ஒரு நொடியில் தாம் எதுவும் செய்ய முடியாமல் ஸ்தம்பித்து போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Image: Grant Melton
அப்படியான ஒரு நிலையில் இருந்ததற்கு தாம் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார். வேகத்தை குறைக்க தாம் முயன்றதாகவும், ஆனால் அதற்கு முன்பு விபத்து நேர்ந்துள்ளதாகவும் டோரிஸ் கண்கலங்கியபடி தெரிவித்துள்ளார்.
இதுவே விபத்துக்கு காரணம்
குளிர் மிகுந்த காலை நேரம் டிராம் இலக்கம் 2551 நியூ அடிங்டனிலிருந்து விம்பிள்டனுக்கு ஈஸ்ட் க்ராய்டன் வழியாக சென்றுள்ளது. இந்த நிலையில், Sandilands பகுதியில் உள்ள ஒரு ஆபத்தான வளைவில் பொதுவாக டிராம் சாரதிகள் மணிக்கு 20 கி.மீற்றர் என வேகத்தை குறைத்துவிடுவார்கள்.
ஆனால் டோரிஸ் சாரதியாக சென்ற அந்த டிராம் இலக்கம் 2551, அந்த ஆபத்தான வளைவில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் சென்றுள்ளது. இதுவே விபத்துக்கு காரணம் எனவும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
Image: MyLondon/PA
மட்டுமின்றி, கண்கள் மூடிய நிலையில் டோரிஸ் தமது அறையில் காணப்பட்டுள்ளார். பயணி ஒருவரே நடந்தவற்றை டோரிஸிடம் விளக்கியுள்ளார்.
ஆனால் டோரிஸ் குற்றவாளி அல்ல என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த விபத்தில் 7 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 19 பேர் காயங்களுடன் தப்பியிருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |