காய்ச்சலுக்கு தீய சக்திதான் காரணம்.., ஒரு மாத குழந்தைக்கு 40 முறை சூடு வைக்கப்பட்ட கொடூரம்
ஒரு மாத ஆண் குழந்தையின் காய்ச்சலுக்கு தீய சக்திதான் காரணம் என்று நம்பி குழந்தைக்கு 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
குழந்தைக்கு சூடு
இந்திய மாநிலமான ஒடிசா, நபரங்பூர் மாவட்டம், சந்தாஹண்டி அருகே உள்ள கம்பரிகுடா பகுதியைச் சேர்ந்த ஒரு மாத ஆண் குழந்தைக்கு சூடு வைக்கப்பட்டுள்ளது.
பின்னர், அந்த குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் உமர்கோட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

கன்னட மொழியை புறக்கணித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்: காங்கிரஸ் MLA சர்ச்சை பேச்சு
தற்போது, இந்த குழந்தை நலமுடன் இருப்பதாக நபரங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சந்தோஷ் குமார் பாண்டா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு மாத குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அழுது கொண்ட இருந்துள்ளது.
அப்போது குழந்தையின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஏதோ தீயசக்தி தான் நோய்க்கு காரணம் என்று நம்பியுள்ளனர்.
இதனால், குழந்தையின் வயிறு மற்றும் தலை பகுதியில் சூடான உலோக கம்பியால் 40 முறை சூடு வைத்துள்ளனர். பின்னர், குழந்தையின் உடல்நிலை மோசமடையவே மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் பல பகுதிகளில் இதுபோன்ற மூடநம்பிக்கை இருந்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்களிடையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |