உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன்... ஹரி கூறியுள்ள மனதை பதைபதைக்கச் செய்யும் ஒரு செய்தி
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வீடியோ ஒன்று மீண்டும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
2019ஆம் ஆண்டு, இளவரசர் ஹரியும் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி மேகனும், Royal Albert Hall என்ற இடத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்கள். முகமெல்லாம் புன்னகையாக இருவரும் விருந்தினர்களுடன் அளவளாவும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன், விழா ஒருங்கிணைப்பாளர், விழாவுக்கு வந்துள்ள ஹரியையும் மேகனையும் மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்க, மக்கள் உற்சாகக் கரவொலி எழுப்புவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சற்று முன்புதான், மேகன் அந்த பயங்கர செய்தியை ஹரியிடம் பகிர்ந்துகொண்டாராம்.
ஆம், ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த மேகன், தன்னை தற்கொலை எண்ணங்கள் வாட்டுகின்றன என கண்ணீருடன் கணவரிடம் பகிர்ந்துகொள்ள, பதறிப்போயிருக்கிறார் ஹரி.
ஏற்கனவே ஹரி தன் தாயை இழந்த நிலையில், கர்ப்பிணியாக இருக்கும் தானும் தற்கொலை செய்துகொண்டால், அவர் தன் வாழ்வில் அங்கமாக உள்ள இன்னொரு பெண்ணையும் இழந்து தவிக்கக்கூடாது என்ற அக்கறையாலேயே தான் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார் மேகன்.
சொல்லப்போனால், 12 வயதாக இருக்கும்போது தன் தாயை இழந்த ஹரி, அந்த துரத்தைக்கூட வெளியே பகிர்ந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல், தனக்குளேயே அமிழ்த்தி வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், மன நல சிகிச்சைக்கு செல்ல ஹரியை வற்புறுத்தியதே மேகன் தான் என்று கூறியுள்ளார் ஹரி.
இவ்வளவு துக்கத்தையும், பதற்றத்தையும் மனதுக்குள் அடக்கி வைத்துக்கொண்டுதான், ஹரியும் மேகனும், உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன் என்பதுபோல, அந்த நிகழ்ச்சியில் மக்களிடம் அளவளாவிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அந்த வீடியோவில், துக்கத்தை வெளிக்காட்ட முடியாமல் தவிக்கும் மேகன், பதற்றத்தை வெளிக்காட்ட முடியாத சூழலில் அமர்ந்திருக்கும் தன் கணவரின் கைகள் இரண்டையும் பற்றி, அவரது இரண்டு கைகளுக்கும் நடுவே தன் கையை வைத்துகொள்வதைக் காணலாம். ஹரி, இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக பல்வேறு பேட்டிகளை அளித்துவருகிறார். அப்படி அவர் அளித்த பேட்டி ஒன்றின்போதுதான் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.