டேட்டிங் ஆப்பில் பழகிய பெண் கிரிப்டோ மோசடி., பணத்தை இழந்த இளைஞர்
டேட்டிங் ஆப்பில் பழகிய பெண்ணிடம் கிரிப்டோ மோசடியில் சிக்கி மங்களூரூவைச் சேர்ந்த இளைஞர் தனது பணத்தை இழந்துள்ளார்.
கர்நாடகாவில் மங்களூருவைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவர், 'Quack Quack' என்ற டேட்டிங் ஆப்பில் Isha Singh என்ற பெண்ணை சந்தித்தார்.
பின்னர் Telegram வழியாக தொடர்பு வளர்ந்தது. இந்த நிலையில் ஈஷா, கிரிப்டோகரன்சி முதலீட்டில் லாபம் கிடைக்கும் என கூறி, ஒரு இணையதள லிங்கை பகிர்ந்துள்ளார்.
பிரசாந்த் முதலில் ரூ.50,000 முதலீடு செய்துள்ளார். அதில் ரூ.2,900 மற்றும் ரூ.8,000 லாபமாக பெற்றுள்ளார்.

இதனால் நம்பிக்கை ஏற்பட்ட அவர், ஈஷாவின் ஆலோசனையின் பேரில், செப்டம்பர் 25-ஆம் திகதி ரூ.2.40 லட்சம் கூடுதலாக முதலீடு செய்துள்ளார். WhatsApp வழியாக பேசி, ஈஷாவின் மொபைல் எண்ணுக்கு பணம் அனுப்பியுள்ளார்.
இணையதளத்தில் அவரது கணக்கில் முதலீடு மற்றும் லாபம் காட்டப்பட்டது. ஆனால் பணத்தை திரும்ப பெற முயன்றபோது, கணக்கு எண்ணின் கடைசி இலக்கங்கள் மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மூலம் அவர் மோசடியில் சிக்கியதை உணர்ந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, பிரசாந்த் மங்களூருவில் DK CEN குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகள் 66(C), 66(D) மற்றும் பாரதீய நியாய சனிதாவின் பிரிவுகள் 318(4), 319(2) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |