Cryptocurrency சரிவு: 60,000 டொலருக்கு கீழ் இறங்கிய Bitcoin., அடிவாங்கிய மற்ற நாணயங்கள்
Bitcoin மற்றும் பிற கிரிப்டோ நாணயங்கள் செவ்வாயன்று கடுமையாக வீழ்ச்சியடைந்தன.
உலகின் மிகப்பெரிய கிரிப்டோ நயமான Bitcoin, லண்டன் நேர வர்த்தகத்தின் போது 60,000டொலருக்கு கீழே இறங்கி, ஒரு கட்டத்தில் 58,702 டொலராக குறைந்தது.
காயின் மெட்ரிக்ஸ் தரவுகளின்படி, பின்னர் அந்த இழப்புகளில் சிலவற்றை மீட்டெடுத்தது, மாலை 4:10 மணி நிலவரப்படி 60,595.44 டொலருக்கு சென்று 5.2% குறைந்துள்ளது.
அதேபோல், இரண்டாவது இடத்தில் உள்ள Ethereum 10 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது.
CoinGecko படி, உலகளாவிய கிரிப்டோ சந்தையின் கேப்பிட்டல் கடந்த 24 மணி நேரத்தில் 10% குறைந்து $2.7 டிரில்லியனாக உள்ளது.
முதல் இரண்டு பெரிய கிரிப்டோகரன்சிகள் இழப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், Cardano, Ripple, Polkadot, Dogecoin மற்றும் Shiba Inu உள்ளிட்ட பல ஆல்ட்காயின்கள் மதிப்பு சரிவைக் கண்டன.
இந்த நிலையிலும், DogeFi, Bitcoin Hedge மற்றும் Underdog உள்ளிட்ட சில க்ரிப்டோ-நாணயங்கள் வீழ்ச்சியிலிருந்து தப்பித்து.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்ற முன்னேற்றங்களுக்கிடையில் கிரிப்டோகரன்சிக்கு பொருந்தும் வரி அறிக்கை விதிகளை உள்ளடக்கிய புதிய சட்டத்தில் கையெழுத்திட்து, இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று சில ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.