Google சிஇஓ சுந்தர் பிச்சையிடம் எவ்வளவு Cryptocurrency உள்ளன தெரியுமா? அவரே சொன்ன ஆச்சரியமூட்டும் தகவல்
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் எவ்வளவு கிரிப்டோகரன்சி உள்ளது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
Google மற்றும் அதன் தாய் நிறுவனமான Alphabet தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள பொருளாதார மன்றத்தில் ஒரு நேர்காணலில் கிரிப்டோகரன்சி தொடர்பான தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார்.
அவர் தலைமை வகிக்கும் நிறுவனத்தைப் பற்றிய பிற கேள்விகளுடன், பிச்சையிடம் கிரிப்டோகரன்சி எவ்வளவு உள்ளது என்றும் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், தனக்கு எந்த கிரிப்டோகரன்சியும் இல்லை என கூறினார். ஆனால், அவ்வப்போது அவர் அதில் ஈடுபட்டதும் எல்லோருக்கும் தெரியும் என்று கூறினார்.
2018-ல் நியூயார்க்கில் நடந்த ஒரு வணிக மாநாட்டின் போது பேசிய சுந்தர் பிச்சை, அந்த நேரத்தில் 11 வயதாக இருந்த தனது மகனுடன் இரவு உணவில் இருந்தபொது, தான் பிட்காயின் பற்றி பேசிக்கொண்டிருந்ததாகவும், அப்போது, வீட்டில் உள்ள கணினியில் தனது மகன் Ethereum-ஐ மைனிங் செய்து கொண்டிருந்ததாக கூறியதாகவும் வெளிப்படுத்திஇருந்தார்.
அந்த வகையில், வெளியே தெரியாமல் அவரிடம் ஏகப்பட்ட கிரிப்டோநாணயங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், ஒரு நாணயம் கூட தனக்கு இல்லை என அவர் கூறிய பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.