Cryptocurrency மோசடி: கடுமையான தண்டனைகளை அறிவித்த பிரபல நாடு!
Cryptocurrency மோசடிகளில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் Cryptocurrency மோசடியில் ஈடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 மில்லியன் ஐக்கிய அரபு அமீரக திர்கம் (AED) அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
டிசம்பர் மாத தொடக்கத்தில் துபாய் உலக வர்த்தக மையம் கிரிப்டோகரன்சிக்கென தனி பொருளாதார அமைப்பை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்தது.
மேலும் கிரிப்டோகரன்சிக்கென தனி சட்ட விதிகள் உருவாக்கப்படும் எனவும், உலகளாவிய கிரிப்டோ பரிமாற்றங்களுக்கு கடுமையான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் கூறியிருந்தது.
ஐக்கிய அரபு அமீரகம், அரபு நாடுகளில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களை குறிவைத்து நடைபெறும் மோசடியில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனைகளை இயற்றியுள்ளது.
அதன்படி கிரிப்டோ மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு 5 வருட சிறை தண்டனை மற்றும் 1 மில்லியன் AED (இலங்கை ரூபாயின் மதிப்பில் 5.52 கோடி) வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்த சட்டம் வரும் ஜனவரி 2022 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் கூறியுள்ளார்.