Cryprocurrency: Shiba Inu-வை பட்டியலிட்ட மற்றோரு எக்ஸ்சேஞ்!
Shiba Inu கிரிப்டோ நாணயம் புதிதாக மற்றோரு இந்திய Cryptocurrency எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனமான CoinSwitch, கடந்த 18 மாதங்களில் கடுமையான விடாமுயற்சிக்குப் பிறகு 80 நாணயங்களுக்கு மேல் பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் கிரிப்டோ முதலீட்டை பாதுகாப்பானதாக்க பல நடவடிக்கைகளிலும் CoinSwitch நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் 30 வியாழக்கிழமையன்று கிரிப்டோ முதலீட்டு நிறுவனமான CoinSwitch, ஷிபா இனுவை (SHIB) அதன் வர்த்தக தளத்தில் பட்டியலிட்டுள்ளது.
இப்போது பயனர்கள் இந்த பிரபலமான கிரிப்டோ நாணயத்தை இந்திய ரூபாயில் வாங்கலாம், வர்த்தகம் செய்யலாம், விற்கலாம்.
SHIBA INU is now on CoinSwitch!! ?
— CoinSwitch Kuber (@CoinSwitchKuber) December 30, 2021
To celebrate the launch, we present the #ShibaOnCoinSwitch Giveaway!
> Win #BTC worth ₹ 2,00,000 ?
> 2000 WINNERS win ₹100 each ?
How to participate?
1. RT this tweet and Follow@CoinSwitchKuber
2. Fill this form: https://t.co/hZKAibWYi0 pic.twitter.com/PF7k9WOJSt
அனைவருக்கும் சமமாக பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்ட CoinSwitch, புதிய நாணயத்தை பட்டியலிட்டாலும் முதலீட்டாளர் பாதுகாப்பை முன்னணியில் வைத்திருக்க விரும்புகிறது.
எனவே, வியாழனன்று CoinSwitch நிறுவனம் ரிஸ்கோமீட்டர் (Riskometer) என்ற தயாரிப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு நாணயத்தில் முதலீடு செய்வதற்கு முன் பயனர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க உதவும் முயற்சியாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.