IPL 2024: டாஸ் வென்ற RCB முதலில் பேட்டிங் தேர்வு, CSK-வில் 2 புதிய வீரர்கள் அறிமுகம்
இந்தியன் பிரீமியர் லீக்கின் பதினேழாவது சீசன் கண்களுக்கு விருந்துடன் இன்று தொடங்கியது.
தொடக்க விழா முடிந்ததும் நாணயசுழற்சியை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் டுபிளெசிஸ் துடுப்பாட தெரிவு செய்தார்.
தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அனுஜ் ராவத் விக்கெட் கீப்பிங் செய்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, சுழற்பந்து வீச்சாளர் சமீர் ரிஸ்வி (Sameer Rizvi) ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிறார்.
ரச்சின் ரவீந்திரா (அறிமுகம்), டேரில் மிட்செல், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் மகேஷ் தீக்ஷனா ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் சென்னை அணியில் விளையாடுவதை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உறுதிசெய்தார்.
? Toss Update ?
— IndianPremierLeague (@IPL) March 22, 2024
It's Game 1⃣ of the #TATAIPL 2024 and @RCBTweets have elected to bat against @ChennaiIPL in Chennai.
Follow the match ▶️ https://t.co/4j6FaLF15Y #CSKvRCB pic.twitter.com/QA42EDNqtJ
சேப்பாக்கத்தில் ஆர்சிபிக்கு எதிராக வலுவான சாதனை படைத்துள்ள சென்னை அணி மற்றொரு வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.
இந்த சீசனிலும் ஆர்சிபிக்கு கோஹ்லியும், டுபிளெசிஸும் இன்னிங்சை தொடங்கினார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |