வாழ்வா சாவா போட்டியில் ருத்ர தாண்டவமாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்! மைதானத்தில் பறந்த சிக்ஸர்கள்
தனது கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 222 ஓட்டங்கள் குவித்துள்ளது.
வாணவேடிக்கை காட்டிய வீரர்கள்
டெல்லி அருண் ஜெய்ட்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பாடியது. தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே இருவரும் வாணவேடிக்கை காட்டினர்.
Two in Two ➡️ Three in Three - A #RocketRaja special! ?#WhistlePodu #Yellove #DCvCSK ??pic.twitter.com/VbwUgjNRnn
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2023
சிக்ஸர் மழை பொழிந்த கெய்க்வாட் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன் பின்னரும் அதிரடியில் மிரட்டிய அவர் 50 பந்துகளில் 79 ஓட்டங்கள் விளாசினார். இதில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்.
அரைசதம் விளாசல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 141 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஷிவம் தூபே அதிரடியாக 9 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார்.
இதற்கிடையில் அரைசதம் அடித்த கான்வே 52 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 7 பந்துகளில் 20 ஓட்டங்கள் விளாசினார்.
Count ?
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2023
DevON ?#DCvCSK #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/QHPaEp3SGT
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்கள் குவித்தது.
? WE LOVE YOU JADDU BHAI ?#WhistlePodu #Yellove #DCvCSK ??pic.twitter.com/pAD52GBE4T
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2023