அல்பி மோர்கல், மோஹித் சர்மா; பயிற்சியாளர் குழுவில் பாரிய மாற்றம் செய்துள்ள CSK
csk adds albie morkal, mohit sharma, gareth batty in coaching squad: ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த 3 தொடர்களாக லீக் சுற்றிலே வெளியேறி தடுமாறி வருகிறது.
2027 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள CSK அணி ஒட்டுமொத்தமாக பயிற்சியாளர் குழுவை மாற்றியமைத்துள்ளது.
CSK பயிற்சியாளர் குழுவில் மாற்றம்
ஐபிஎல் தொடர் முதல் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங் ஓய்வு பெற்ற நிலையில், அந்த பதவிக்கு ஜாகீர் கான் நியமிக்கபட்டார்.

அதைத்தொடர்ந்து, பயிற்சியாளர் குழுவிலிருந்த துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ், உதவி துடுப்பாட்ட பயிற்சியாளர் ராஜீவ் குமார், வலிமை மற்றும் உடற்பயிற்சிப் பயிற்சியாளர் கிரெக் கிங் மற்றும் உடற்பயிற்சி நிபுணர் டாமி சிம்செக் ஆகியோரை விடுவித்துள்ளது.

தற்போது CSK அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் மோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
Once a Super King. Now ready to shape the next generation! 💛 From his IPL debut in Yellow in 2013 to winning the Purple Cap in 2014, Mohit Sharma has given us plenty of reasons to whistle with his masterful slower deliveries and variations! Welcome home, Mohit! 🦁 #WhistlePodu #Yellove
— Chennai Super Kings (@ChennaiIPL) October 27, 2026
மோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் 2013 -2018 காலகட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக 48 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

2014 ஐபிஎல் தொடரில் 24 விக்கெட்கள் கைப்பற்றி, அதிக விக்கெட்களை வீழ்த்துபவருக்கான ஊதா நிற தொப்பியை வென்றார்.
Three consecutive County Championship titles. A proven leader! 💛 Former England international Gareth Batty brings his wealth of experience, tactical expertise, and passion for developing talent to the Super Kings! Welcome to the Den, Gareth Batty! 🦁 #WhistlePodu #Yellove https://t.co/FCFPJWYiv5
— Chennai Super Kings (@ChennaiIPL) October 27, 2026
உதவி பயிற்சியாளர்களாக இங்கிலாந்து முன்னாள் வீரர் கரேத் பேட்டி மற்றும் தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஆல்பி மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The lion behind some of Chepauk's most unforgettable moments is ready for a new innings! 💛 An OG Super King from 2008, a key member of our back-to-back IPL triumphs in 2010 and 2011! Albie Morkel's story with the Super Kings continues! Welcome aboard, Albie! 🦁 #WhistlePodu #Yellove
— Chennai Super Kings (@ChennaiIPL) October 27, 2026
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடர் முதல் 2013 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய, ஆல்பி மோர்கல், சிஎஸ்கே அணிக்காக 78 போட்டிகளில் 827 ஓட்டங்கள் மற்றும் 76 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

பீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபோஸ்டர் மற்றும் உதவி பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் பொறுப்பில் தொடர்கின்றனர்.