பஞ்சாப் கிங்ஸை பஞ்சராக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்! சுழலில் மிரட்டிய ஜடேஜா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 12 புள்ளிகளை பெற்றது.
ஜடேஜா அதிரடி
தரம்சாலா மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாடியது.
கெய்க்வாட் 32 ஓட்டங்களிலும், மிட்செல் 30 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க சென்னை அணி தடுமாறியது.
That turnaround by Rahul! ?#PBKSvCSK pic.twitter.com/8zfM8ggQCP
— Punjab Kings (@PunjabKingsIPL) May 5, 2024
ராகுல் சஹார் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். எனினும் ரவீந்தர ஜடேஜா அதிரடியாக 26 பந்தில் 43 ஓட்டங்கள் விளாசினார்.
The Thalapathy Stand! ⚔️??#PBKSvCSK #WhistlePodu ?? pic.twitter.com/IW4gwEnyVs
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2024
அதேபோல் ஷார்துல் தாக்கூர் 11 பந்துகளில் 17 ஓட்டங்கள் விளாச, CSK அணி 9 விக்கெட்டுக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது. ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
— Punjab Kings (@PunjabKingsIPL) May 5, 2024
தேஷ்பாண்டே மிரட்டல்
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பேர்ஸ்டோவ் (7), ரோசோவ் (0) ஆகியோ தேஷ்பாண்டே பந்துவீச்சில் நடையை கட்டினார்.
எனினும் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக 23 பந்தில் 30 ஓட்டங்கள் விளாசினார். ஆனால், ஜடேஜா தனது மாயாஜால சுழலில் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகளை சாய்த்தார்.
Jaddu says Eda Mone!! ??#PBKSvCSK #WhistlePodu ?? pic.twitter.com/k4kfuIHlyD
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2024
அவரது பந்துவீச்சில் சாம் கரன் (7), அஷுடோஷ் சர்மா (3) ஆட்டமிழந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 139 ஓட்டங்கள் எடுத்து, 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே மற்றும் சிமர்ஜீத் சிங் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Peak performance all around!??#WhistlePodu #PBKSvCSK #Yellove?? pic.twitter.com/MORdictg8W
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |