WPL கிரிக்கெட்டில் மகளிர் CSK அணி: CEO காசி விஸ்வநாதன் உறுதி
மகளிர் ஐபிஎல் டி20 தொடரில் விரைவில் தமிழ்நாடு சார்பில் அணி இடம்பெறும் என்று CSK அணியின் CEO காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மகளிர் ஐபிஎல் டி20
ஆண்கள் IPL டி20 போட்டிகளை போலவே இந்தியாவில் மகளிர் ஐபிஎல் டி20 போட்டிகளும்(WPL) சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மகளிர் ஐபிஎல் டி20(WPL) தொடரில் மும்பை, பெங்களூரு, உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் டெல்லி என மொத்தம் 5 அணிகள் உள்ளன.

இந்தாண்டு குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வரும் WPL தொடரில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் எலிமினேட்டர் போட்டியில் இன்று மோதின.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மகளிர் ஐபிஎல் டி20 CSK அணி
இந்நிலையில் சமீபத்தில் CSK அணியின் CEO காசி விஸ்வநாதன் வழங்கிய தகவலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக மகளிர் கிரிக்கெட்டில் முதலீடு செய்யும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இவரின் கூற்றுப்படி, விரைவில் WPL தொடரில் தமிழ்நாடு அணியை அடையாளப்படுத்தும் அணி ஒன்று விரைவில் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் மூன்று சீசன்களில் WPL கோப்பையை மும்பை இரண்டு முறையும் ஆர்சிபி அணி ஒருமுறையும் கைப்பற்றியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |