2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? CSK CEO காசி விஸ்வநாதன் பதில்
csk ceo kasi viswanathan about dhoni in 2027 ipl: 2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு CSK CEO காசி விஸ்வநாதன் பதிலளித்துள்ளார்.
2027 ஐபிஎல் தொடரில் தோனி?
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளதற்கு அந்த அணியில் எம்.எஸ்.தோனி அங்கம் வகிப்பதும் ஒரு காரணமாக உள்ளது.

அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விலகினாலும் CSK வீரராக அவர் தொடர்ந்து அணியில் உள்ள நிலையில், காயம் காரணமாக 2026 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட தோனி விளையாடவில்லை.
மேலும், தோனிக்கு 44 வயதாகி விட்ட நிலையில், வயது மற்றும் உடல்நிலை காரணமாக அவர் ஓய்வு பெற்று விடுவார் என கடந்த 2 ஐபிஎல் தொடர்களாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், தோனி 2027 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO காசி விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், "இந்த கேள்வியை நானும் அவரிடம் தான் கேட்கனும். அவர் இன்னும் அணியில் வீரராக தொடர்வதால் விளையாட வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளார்.