சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பயிற்சியாளர்!
காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் பந்துவீச மாட்டார் என, CSK அணி பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ்
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 31ஆம் திகதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றுள்ளார். ஆல் ரவுண்டர் வீரரான அவர் 16.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார், முன்னதாக பயிற்சியின்போது ஸ்டோக்ஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
பயிற்சியாளர் தகவல்
இந்த நிலையில், ஸ்டோக்ஸிற்கு இடது கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் இந்த சீசனின் முன்பகுதியில் பந்துவீசமாட்டார் என பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இக்கட்டான சூழலில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவரான ஸ்டோக்ஸ் பந்துவீச மாட்டார் என பயிற்சியாளர் கூறியுள்ளது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.