CSK vs KKR - ஒரே போட்டியில் 5 மோசமான சாதனைகளை படைத்த சென்னை அணி
ஐபிஎல் தொடரின் 25 வது லீக் போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
CSK தோல்வி
முதலில் துடுப்பாட்டம் ஆடிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 103 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
104 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 10.1 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 107 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் மோசமாக செயல்பட்ட சென்னை அணி, ஒரே சிக்ஸ் மட்டுமே அடித்தது. மேலும், 7 வீரர்கள் 5க்கும் குறைவான ஓட்டங்களையே எடுத்தனர்.
சென்னை அணி இந்த தொடரில், இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்வியை பெற்று, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
மோசமான சாதனைகள்
இந்த தோல்வியின் மூலம், சென்னை அணி பல்வேறு மோசமான சாதனைகளை படைத்துள்ளது.
முதல்முறையாக சென்னை அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
சென்னை அணியின் கோட்டையாக கருதப்பட்ட சேப்பாக்கம் மைதானத்தில், முதல்முறையாக தொடர்ந்து 3 தோல்விகளை பெற்றுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில், இதுவே சென்னை அணியின் மிகைக்குறைவான (103) ஸ்கோர் ஆகும்.
முதல்முறையாக, ஒரு இன்னிங்ஸில் ஸ்பின்னர்களிடம் 6 விக்கெட்டுகளை சென்னை அணி இழந்துள்ளது.
10.1 ஓவரில் இலக்கை அடைந்து, 59 பந்துகளை மீதம் வைத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 46 பந்துகளை மீதம் வைத்து மும்பை அணி சென்னை அணி வீழ்த்தியதே மோசமான தோல்வியாக கருதப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |