உன் திறமை மீது நம்பிக்கை வை..!இளம் இலங்கை வீரருக்கு தோனி வழங்கிய அறிவுரை
ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல்முறையாக களமிறங்கி உள்ள இலங்கை வீரர் மதீஷா பதிராணா தோனி கூறிய அறிவுரை தனக்கு பெருமளவு உதவியதாக தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி உடனான போட்டி
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல்முறையாக இளம் இலங்கை வீரர் மதீஷா பதிராணா களமிறக்கப்பட்டார்.
Thank you Legend ❤️. Keep supporting like you always do. pic.twitter.com/EVHXoXO3Oy
— Matheesha Pathirana (@matheesha_9) April 18, 2023
இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் மலிங்காவுடன் இவரது பந்து வீச்சு முறை ஒத்து இருந்ததால் போட்டியின் போது மதீஷா பதிராணா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தோனி அறிவுரை
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான போட்டி அனுபவம் குறித்து மதீஷா பதிராணா பகிர்ந்துள்ளார்.
அதில், “ ஆர்சிபி உடனான போட்டியில் நான் வீசிய முதல் 2 ஓவர்களிலேயே 28 ஓட்டங்களை விட்டுக் கொடுத்துவிட்டேன், இதனால் நான் மிகவும் பதட்டமாக இருந்தேன்.
Matheesha Pathirana appreciation post ?✨#WhistlePodu #Yellove ?? pic.twitter.com/Hjumv7m8hv
— Chennai Super Kings (@ChennaiIPL) April 18, 2023
அப்போது தோனி என்னிடம் வந்து “கவலைப்பட ஒன்றுமில்லை” அமைதியாக இரு. உன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து பந்து வீசு என்று அறிவுரை வழங்கினார்.
அது எனக்கு அடுத்தடுத்த 2 ஓவர்களை சிறப்பாக வீச பெருமளவு உதவியது என்று மதீஷா பதிராணா தெரிவித்துள்ளார்.