தோனி-300, ஜடேஜா-200, டூ பிளெஸ்ஸிஸ்-100: இறுதிப் போட்டியில் மைல்கல் புதிய சாதனைகளை படைத்த CSK வீரர்கள்!
ஐபிஎல் 2021 சீசனின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணிக்குஎதிராக விளையாடும் நிலையில், CSK வீரர்களாக எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஃபாஃப் டூ பிளெசிஸ் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.
சென்னை சுயப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி 300 டி-20 போட்டிகளில் கேப்டனாக வவிளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்தியன் பிரீமியர் லீக் 2021 இறுதிப் போட்டியில் CSK கேப்டனாக எம்எஸ் தோனி இந்த சாதனையை படைத்தார்.
We #Yellove you 300* Thala ?#CSKvKKR #WhistlePodu ? pic.twitter.com/q7wgnxmKTT
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) October 15, 2021
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனியைத் தவிர, 200 க்கும் மேற்பட்ட டி-20 களில் அணிகளுக்கு கேப்டனாக இருந்த ஒரே வீரர் டேரன் சாமி (208போட்டிகள்) மட்டுமே.
கே.கே.ஆருக்கு எதிரான இந்த போட்டி, CSK கேப்டனாக தோனிக்கு ஒன்பதாவது ஐபிஎல் இறுதிப் போட்டியாகும்.
தோனியைத் தவிர, மற்ற இரண்டு சிஎஸ்கே வீரர்களும் ஐபிஎல் 2021 இறுதி போட்டியில் ஒரு மைல்கல்லை உருவாக்கியுள்ளனர்.
ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சென்னை அணிக்காக விளையாடும் 200-வது போட்டியாகும். அதேபோல், தென்னாப்பிரிக்கா வீரர் ஃபாஃப் டூ பிளெஸிஸ் சென்னை அணிக்காக விளையாடும் 100-வது ஐபிஎல் போட்டி இதுவாகும்.
The Super Kings Going Miles together ?#CSKvKKR #WhistlePodu #Yellove ? pic.twitter.com/fQivdaXwDG
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) October 15, 2021