மைதானத்தின் நாலா பக்கமும் பறந்த சிக்சர்கள்! ஐபிஎல் தொடங்கும் நிலையில் மீண்டும் பார்முக்கு வந்து கெத்து காட்டும் டோனி... மிரட்டல் வீடியோ
ஐபில் 2021 தொடரின் இரண்டாவது பாதி இன்று தொடங்கும் நிலையில் சிஎஸ்கே கேப்டன் டோனி பயிற்சி ஆட்டத்தில் சிக்சர்களை பறக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
இன்று மாலை தொடங்கும் முதல் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
கடந்த 2020 சீசனிலும் சரி, இந்த சீசனிலும் சரி சென்னை அணியின் ஒரே சொதப்பல் டோனியின் பேட்டிங் மட்டும் தான்.
இதுவரை விளையாடிய அனைத்து தொடர்களிலும் டோனியின் ராக்கெட் சிக்ஸர்களால் பல போட்டிகளை வென்று குவித்தது சிஎஸ்கே. ஆனால், கடந்த சீசனில் அவரது பேட்டிங் மிக மோசமாக இருந்தது என கூறினால் அது மிகையாகாது!
All arealayum Thala...🥳#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/Zu85aNrRQj
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 18, 2021
இந்நிலையில், டோனி வழக்கத்தை விட சற்று கூடுதலாகவே பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதாவது, ஒருநாளைக்கு 3-4 மணி நேரம் பேட்டிங்கிற்கு என்று மட்டும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தில், டோனி சரமாரியாக சிக்ஸர்களை பறக்கவிட்ட வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
"ஆல் ஏரியாவிலும் தல" என்ற கேப்ஷனோடு வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், மைதானத்தின் நாலாபுறமும் டோனி பந்துகளை பறக்கவிட்டுள்ளார்.