IPL-லில் CSK அணிக்கு பின்னடைவு: வேகப்பந்து வீச்சாளர் தொடரில் இருந்து விலகல்
2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இருந்து CSK வீரர் நாதன் எல்லிஸ் விலகியுள்ளார்.
ஐபிஎல் திருவிழா
2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா இந்த மாதம் 28ம் திகதி தொடங்குகிறது.
நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் விளையாடுகிறது.
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 8 நாட்களே மீதம் உள்ள நிலையில், நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இன்று சென்னை வந்துள்ளார்.

சென்னை அணியின் இளம் வீரர்கள் ஏற்கனவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுடன் சஞ்சு சாம்சனும் விரைவில் பயிற்சியை தொடங்கவுள்ளார்.
நாதன் எல்லிஸ் விலகல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாடும் 11 வீரர்கள் பட்டியலில் இடம் பெறுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து முழுவதுமாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாதன் எல்லிஸ் விலகியுள்ள நிலையில் இது CSK அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு பேட்டிங்கில் பலமாக காணப்படும் நிலையில், பந்துவீச்சில் குழப்ப நிலையே நீடித்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |