சென்னை அணியின் தோல்விக்கு இவர்தான் காரணமா? முதல் Impact வீரரை வறுத்தெடுக்கும் CSK ரசிகர்கள்
ஐபிஎல் வரலாற்றில் முதல் Impact வீரராக களமிறங்கிய தேஷ்பாண்டே ரசிகர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
குஜராத்திடம் தோல்வி
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி Impact வீரர் விதியை செயல்படுத்தியது. அதன்படி அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக துஷர் தேஷ்பாண்டே பீல்டிங்கின்போது களமிறக்கப்பட்டார்.
முதன்மை பந்துவீச்சாளராக செயல்பட்ட அவர் 3.2 ஓவரில் 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இது CSK அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.
@Sportzpics / IPL
கடுமையான விமர்சனம்
ஏனெனில் CSK பந்துவீச்சாளர்களில் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்தவர் தேஷ்பாண்டே தான். இதன் காரணமாக சென்னை அணி ரசிகர்கள் அவரை கடுமையாக விளாசி வருகின்றனர்.
கால்பந்து, ரக்பி மற்றும் கூடைப்பந்து உள்ளிட்ட பிற அணி விளையாட்டுகளில் தாக்கத்தை செலுத்தும் (Impact Player) வீரர் விதிமுறை உள்ள நிலையில், தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டிலும் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
@Twitter/IndianPremierLeague