CSK அணியின் முக்கிய வீரர் விலகல் - ப்ளேஆப் வாய்ப்பை பாதிக்குமா?
CSK அணியின் முக்கிய பந்துவீச்சாளர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஜேமி ஓவர்டன் விலகல்
2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி, 6 வெற்றி , 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், CSK அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

தற்போது அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் நிலையில், அடுத்தது வீரர்கள் காயமடைந்து வருவது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஜேமி ஓவர்டன் வலது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்வதாக CSK அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Official Announcement
— Chennai Super Kings (@ChennaiIPL) May 13, 2026
Jamie Overton has a right thigh injury and will be returning to the UK for further assessment and management. pic.twitter.com/pzlO5qE9Dp
இதனால் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை கருதப்படுகிறது.
11 போட்டிகளில் விளையாடியுள்ள ஜேமி ஓவர்டன், 14 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும், CSK அணிக்காக அதிக விக்கெட்கள் எடுத்த 2வது வீரராக ஜேமி ஓவர்டன் உள்ளார்.
ஜேமி ஓவர்டனின் விலகல் அணியின் பந்துவீச்சை பாதிக்குமா அல்லது மாற்று வீரர்கள் சமாளிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
CSK அணி நாளை நடைபெற உள்ள போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |