CSK-வை வீழ்த்த முக்கியமான வெளிநாட்டு வீரரை கொண்டு வந்த ரோகித்! பந்து வீச்சை தேர்வு செய்த மும்பை
சென்னை அணிக்கெதிரான இன்றைய போட்டியில், மும்பை இரண்டு முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது.
ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் போட்டிகளில் மும்பை-சென்னை அணி மோதும் போட்டியும் ஒன்று, அதன் படி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி இன்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதன் படி சற்று முன் இரு அணிகளுக்கிடையே டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற மும்பை அணியின் தலைவர் ரோகித் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளார்.
Jimmy Neesham is all set to make his debut for the @mipaltan ?#MIvCSK #VIVOIPL pic.twitter.com/ImPFrepsjl
— IndianPremierLeague (@IPL) May 1, 2021
அப்போது தன்னுடைய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும், இஷான் கிஷான் மற்றும் நாதன் குல்டர் நைல் இவர்கள் இருவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் குல்கர்னி மற்றும் ஆல் ரவுண்டர் நியூசிலாந்து வீரர் ஜேமிஷ் நீச்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது ஒரு அருமையான முடிவு என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஜேமிஷ் நீச்சம் அதிரடியாக விளையாடிக் கூடியவர், அதே சமயம் சிறப்பாகவும் பந்து வீசக் கூடியவர், கடைசி கட்டத்தில் பேட்டிங்கிலும் அவரைப் பயன்படுத்தலாம், பவுலிங்கிலும் ரோகித் பயன்படுத்தலாம் என்பதால், இது சென்னை அணியை வீழ்த்த ரோகித்தி வகுத்துள்ள ஒரு வியூகம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் போட்டி முடிந்த பின்பு அவர் எப்படி மும்பைக்கு உதவினாரா? இல்லையா? என்பதை பார்ப்போம்.