தோல்வியிலும் சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை 200 ஓட்டங்கள் குவித்த அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 207
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

முதலில் ஆடிய பெங்களூரு அணி 250 ஓட்டங்கள் குவித்தது. டிம் டேவிட் 70 (25) ஓட்டங்களும், தேவ்தத் படிக்கல் 50 (29) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சர்ஃபராஸ் கான் 25 பந்துகளில் 50 ஓட்டங்கள் விளாசினார்.
எனினும் CSK அணி 207 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியுற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளது.
எனினும், ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் 37வது முறையாக 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளது.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை 200 ஓட்டங்கள் கடந்த அணி என்ற சாதனையை படைத்தது.
ஐபிஎல்லில் இதுவரை 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்த அணிகள்
- சென்னை சூப்பர் கிங்ஸ் - 37
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 36
- பஞ்சாப் கிங்ஸ் - 33
- மும்பை இந்தியன்ஸ் - 32
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 30

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |