தோனி பிடித்த ஒற்றை கேட்ச்! மிரண்டு போன CSK ரசிகர்கள்: வைரல் வீடியோ
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கீப்பர் எம்.எஸ் தோனி பாய்ந்து பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
CSK அபார வெற்றி
IPL-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
முதல் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 206 ஓட்டங்கள் குவித்தனர்.
கடினமான இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில், முன்னணி வீரர்கள் யாரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் 20 ஓவர்களில் வெறும் 143 ஓட்டங்கள் மட்டுமே குவித்தனர்.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
தோனி பிடித்த அந்த ஒற்றை கேட்ச்
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது குஜராத்தின் முன்னணி வீரர்கள் சிலர் ஏமாற்றினாலும், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தி அணியின் ஓட்டங்களை சீராக சேர்க்க முயற்சித்தனர்.
இந்த ஜோடியை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்ற நோக்கில் 12 வது ஓவரின் 3வது பந்தை டேரில் மிட்செல் வீசினார்.
??????? ??? ?
— IndianPremierLeague (@IPL) March 26, 2024
An excellent diving grab behind the stumps and the home crowd erupts in joy?
Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE#TATAIPL | #CSKvGT pic.twitter.com/n5AlXAw9Zg
அப்போது குஜராத் வீரர் விஜய் சங்கரின் பேட்டில் உரசி விட்டு பாய்ந்த பந்தை சென்னையின் அணியின் கீப்பர் எம்.எஸ் தோனி சீங்கத்தின் பாய்ச்சலுடன் தாவி பிடித்து விக்கெட்டை பறித்தார்.
தோனியின் அபாரமான கேட்ச்-ஐ பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்க, சக வீரர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.
42 வயதாகும் எம்.எஸ் தோனியின் இந்த பாய்ச்சலான கேட்ச் சமூக ஊடகங்களில் தீயாய் பரவி ரசிகர்களின் ஆரவாரத்தில் மூழ்கி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indian Premier League, MA Chidambaram Stadium, Chennai Super Kings, Gujarat Titans, MS Dhoni, MS Dhoni dive catch, ipl 2024 MS Dhoni dive catch against gt, ipl viral video